Ads (728x90)

வட மாகாணத்தில் உள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, வவுனியா மாநகர சபையின் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆகியோர் அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மாநகர சபை மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த ஆளுநர், வவுனியா மாநகர சபையின் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீன் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் மற்றும் ஆகிய இருவரும் மேற்குறிப்பிட்ட பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் எனத் தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய, அவர்கள் இருவரும் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget