Ads (728x90)

அமெரிக்கா இலங்கை ஏற்றுமதிகள் மீதான வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.

கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானத்தையடுத்து, இலங்கை ஏற்றுமதிகள் மீது விதிக்க முன்மொழியப்பட்டிருந்த 12.5 சதவீத மேலதிக வரியை 10 சதவீதம் என்ற குறைந்தபட்ச வீதம் வரை குறைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

நியாயமான வர்த்தகம், பொறுப்புமிக்க வணிக நடைமுறைகள் மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாளர் தரங்களை மேம்படுத்துவதில் இலங்கை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.

இந்த வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget