Ads (728x90)

ஐரோப்பாக் கண்டத்தின் மேற்குப் பகுதியை நிலைகுலையச் செய்த கடுமையான வெப்ப அலையினால், கடந்த ஜூன் மாத இறுதியில் 10,000 இற்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் இயங்கும் மரணக் கண்காணிப்பு அமைப்பு (‘EuroMOMO’) இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.

வெப்ப அலையினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் என அந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதுகுறித்து இந்த அமைப்பை நடத்தும் டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் சீரம் நிறுவனத்தின் முதன்மை மருத்துவர் லாஸ் வெஸ்டர்கார்ட் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மனிதர்களின் செயல்பாடுகளால் உலகளவில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றமே இத்தகைய தீவிர வெப்ப அலைகளுக்குக் காரணம் என விஞ்ஞானிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தத் தரவுகள், 27 ஐரோப்பிய நாடுகளின் தேசிய மரணப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் திரட்டப்பட்டவையாகும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget