தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் புவியியல் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, தெனியாய அடிப்படைவைத்தியசாலையைப் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யும் திட்டத்திற்காக, சுமார் 60 கோடி ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு.சந்தோஷ் ஜா ஆகியோர் இதில் கையொப்பமிட்டனர்.
புதிய தெனியாய மருத்துவமனைக்கு சுமார் 600 மில்லியன் ரூபா மதிப்பிலான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், பல தசாப்தங்களாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வலுவான நட்பையும், ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு தனித்துவமான வாய்ப்பாகும் என்று இங்கு உரையாற்றிய, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


Post a Comment