சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்று பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதிய நிலவரப்படி, உயர்நீதிமன்றத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 4,421 வழக்குகள் விசாரணையில் இருப்பதுடன், சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்தகைய வழக்குகளை விரைவாக முடிவு செய்யும் பொருட்டு, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு ஊடாக 47 பொலிஸ் பிரிவுகளின் சிறுவர் மற்றும் பாதுகாப்புப் பணியகங்களை ஒருங்கிணைத்து வழக்கு ஒழுங்குமுறை நடவடிக்கைகளைச் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட சிறுவர்கள் தொடர்பான 5,523க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment