முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டதோடு, பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட இன்று அழைப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment