இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. நைஜீரியா 320.3 என்ற குறியீட்டுடன் முதலிடத்திலும், கொஸ்டாரிகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.
Numbeo நிறுவனம் பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் இந்தக் குறியீட்டைத் தயாரிக்கிறது. ஒரு நாட்டின் போக்குவரத்து நிலையை மதிப்பிட பின்வரும் காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன.
நேர செலவீட்டு குறியீடு (Time Expenditure Index), திறமையின்மை குறியீடு (Inefficiency Index), காபனீரொட்சைட் வெளியேற்ற குறியீடு (CO2 Emission Index) அகியவற்றின் தரவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
மேலும், ஆசிய அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திலுள்ளது.
இத்தரவுகள், இலங்கையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது.

Post a Comment