Ads (728x90)

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, கடல்வழி முற்றுகை மீண்டும் ஜூலை 14 மாலை 4 மணி முதல் (அமெரிக்க நேரம்) அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் அறிவித்துள்ளது. 

இதற்காக மத்திய கிழக்குக் கடல் பிராந்தியத்தில் 20 இற்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்களும், நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் திறன்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் தென்பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்கிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget