இப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை மூலம் சமர்ப்பிக்க முடியும்.
இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டத்தின் அடிப்படையில் இலங்கை ஆசிரியர் சேவை தரம் 2-II க்கு நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த, தரம் 3 இலிருந்து தரம் 2-II க்குப் பதவியுயர்வு பெற்ற அல்லது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தரம் 2-II இல் நான்கு வருட சேவைக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் இப்பரீட்சையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் இத்தடைதாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்யாத போதிலும், எதிர்காலத்தில் அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு தரம் 2-I க்குப் பதவியுயர்வு பெற்ற ஆசிரியர்கள், தரம் 1 இற்கு மேலதிக பதவி உயர்வைப் பெறுவதற்கு இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
இப்பரீட்சைக்குரிய சுயகற்றல் மொடியுள்களை கல்வி அமைச்சின் e-Thaksalawa உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
.jpeg)
Post a Comment