உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிட்டுள்ளது.
அரசாங்கமானது மேற்படி இன்வொய்ஸ் படிவத்தை கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதும், வர்த்தக சமூகம் மற்றும் வரி செலுத்துவோர் தங்களது நிறுவன மட்டத்தில் மென்பொருள் அமைப்புகளை தயார் செய்து கொள்வதற்காக அவகாசம் வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வரி வசூலிப்பு முறையை சீரமைக்கவும், வரி வலையமைப்பின் வெளிப்படைத்தன்மையை உயர்த்தவும் கடந்த மார்ச் 27 ஆம் திகதி இந்த புதிய இன்வொய்ஸ் வடிவம் பிரகடனப்படுத்தப்பட்டது.
போலி இன்வொய்ஸ் பயன்பாட்டைத் தடுப்பது, பரிவர்த்தனைகளை உடனுக்குடன் கண்காணிக்கும் திறன் மற்றும் வரி கசிவைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment