Ads (728x90)

உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனம் 2026 முதல் 2031 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளது.

2026 பெப்பிரவரி 9 ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைவாக, இலங்கை அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையிலான கடன் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இவற்றில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களுக்காகத் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்தல், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தொடர்புகளை விரிவாக்குவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பிராந்திய பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதோடு, போட்டித்தன்மையையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget