பண்டைய கடல்சார் வர்த்தகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டுப் பாதை வரை நீண்டு செல்லும் இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவு வரலாற்றை சுட்டிக்காட்டிய அவர், 70 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான றப்பர் - அரிசி ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆதரவுக்கும். ஒற்றுமைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டார்.
தூதரக உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, பெல்ட் அண்ட் ரோடு ஊடான ஒத்துழைப்புகள் மற்றும் நீர் தொழில்நுட்பம், கல்வி போன்ற துறைகள் மூலமாக சீனா - இலங்கை உறவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்கள், இலங்கையின் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை 2025 ஆம் ஆண்டில் சீனாவுக்கான தமது உத்தியோகப்பூர்வ பயணங்களின்போது சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய வியூக வழிகாட்டல்களை வழங்கியுள்ளன என்றார்.
அண்டை நாட்டு இராஜதந்திரக் கொள்கையில் சீனா எப்பொழுதும் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், தற்போது இரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
வளர்ச்சி உத்திகளை ஒருங்கிணைத்தல், பரஸ்பர வெற்றியை ஊக்குவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவுக் கூட்டாண்மையை ஆழப்படுத்துதல் போன்றவற்றுக்காக இலங்கையுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்பட சீனா தயாராகவுள்ளது என்றும் தூதுவர் வெய் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்ட அவர், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவும், றப்பர் - அரிசி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவும் அப்போது கொண்டாடப்படவுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment