Ads (728x90)

நாட்டில் சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசாங்கம் நிச்சயமாக நிறைவேற்றும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் சட்டமானது ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையிலும், செல்வந்தர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் விலக்கு அளிக்கும் வகையிலுமே காணப்பட்டது.

ஆனால் தற்போதைய ஆட்சியில் பெரியவர், சிறியவர் அல்லது பணக்காரர், ஏழை என்ற எந்தவித பாகுபாடுமின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாகவே பழைய ஊழல்வாதிகளும், குற்றவாளிகளும் அச்சமடைந்து 22வது திருத்தத்திற்கு எதிராகக் கூச்சலிட்டு வருகின்றனர்.

நீதிமன்றச் சுதந்திரம் சீர்குலைக்கப்பட்ட கடந்த கால நிலைமையை மாற்றி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகவே இந்த 22வது திருத்தம் கொண்டுவரப்படுகின்றது. மக்கள் மத்தியில் இதற்கான தேவைப்பாடும் நீதிக்கான எதிர்பார்ப்பும் தெளிவாகக் காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget