இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இவ்விபத்துக்களில் உயிரிழந்த 1,693 பேரில் 555 பாதசாரிகளும், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், பின்னால் பயணித்த 119 பேரும், 115 மிதிவண்டி செலுத்துனர்களும், 136 வாகனச் சாரதிகளும் மற்றும் 162 பயணிகளும் அடங்குகின்றனர்.
அத்துடன், இக்காலப்பகுதியில் 3,125 பாரதூரமான விபத்துக்களும், 6,477 சிறு விபத்துக்களும் மற்றும் 2,388 சொத்துச் சேதங்களை ஏற்படுத்திய விபத்துக்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையில் சிறியளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
2.jpeg)
Post a Comment