பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையாக யோசனைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.
முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்குமாறு செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது. ஏனெனில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்திச் செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment