Ads (728x90)

மனித உரிமை ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 இல் யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக சாட்சியமளிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு யாழ்ப்பாணம் செல்ல மறுப்புத் தெரிவித்ததால், எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, நிகழ்நிலை மூலமாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்குமாறு யாழ்ப்பாண தலைமை நீதிவான் எஸ். லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் பிரதம நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget