Ads (728x90)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராகப் பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இப்பதவி உயர்வு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பின்னோக்கித் திகதியிடப்பட்டுள்ளது.

மே மாதம் நிர்வாக மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (AAT) அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரிலேயும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதவி உயர்வு நடைமுறையை அங்கீகரிக்கும் வகையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஷானி அபேசேகரவை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் ஊடாக இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget