ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நெடுஞ்சாலைகள் அமைச்சால் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அனைத்து வீதி அபிவிருத்திப் பணிகளையும் உரிய காலத்தில் நிறைவு செய்து பொதுமக்களுக்கு செயற்திறனான போக்குவரத்து கட்டமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும், தித்வா அனர்த்த நிலைமையின் கீழ் ஒதுக்கப்பட்ட 402 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழும் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
மத்திய அதிவேகப் பாதையின் 4 ஆம் கட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள குருநாகல் - கலேவெல மற்றும் ருவன்புர அதிவேகப் பாதையின் திட்டமிடல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.மத்திய அதிவேகப் பாதையின் கடவத்தை - மீரிகம வரையிலான பகுதி மற்றும் துறைமுக நுழைவுச் சாலையின் நிர்மாணப் பணிகள், மத்திய அதிவேகப் பாதையின் 3 ஆம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பொத்துஹெர - கலெகதர வரையிலான பகுதி உள்ளிட்ட அதிவேகப் பாதை நிர்மாணத் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.



Post a Comment