Ads (728x90)

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பக்திப் பெருக்குடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

2026 ஜூலை 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இக்கோவில் மகோற்சவப் பெருவிழாக்கள், தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

ஆடி அமாவாசை தினமான நாளை புதன்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. தீர்த்தத் திருவிழாவிற்காக மாவிட்டபுரத்திலிருந்து காலை கீரிமலை நோக்கிப் புறப்படும் மாவை கந்தனுக்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை கண்டகி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget