2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபராகல மலையில் ஏற்பட்ட மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ”நவோதயபுரம்”வீடமைப்புத் திட்டத்தை இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மலையக மக்கள் எமது சகோதர மக்கள் என்ற வகையில் இந்நாட்டின் பூரண உரிமைகளையும், வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பல நூற்றாண்டுகளாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அவர்களின் பிள்ளைகளுக்கும் உரித்தாக்குவது நியாயமற்றது என்றும் இங்கு வலியுறுத்தியதுடன், இந்நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்து, இறுதியில் இப்பூமிக்கே மண்ணாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த வாழ்க்கையை உரித்தாக்கும் பொறுப்பினை எமது அரசாங்கம் ஏற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.மேலும், கடந்த யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டிற்கு வருவதில் இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதையும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.இலங்கையின் இதயமாகக் கருதப்படும் மத்திய மலைநாடு நாட்டின் கண்முன்னே அழிவடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மண்சரிவுகள், இயற்கை நீரூற்றுகள் வற்றிச் செல்வது மற்றும் ஆறுகள், ஓடைகள் வண்டல் படிந்து மாசுபடுவது போன்ற நிலைகளை தாம் நேரில் கண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மலையகத் தமிழர்கள் முழுமையான உரிமைகளுடன் நாட்டின் சம குடிமக்களாக வாழ்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.




Post a Comment