Ads (728x90)

துபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு துபாய் காவல்துறையினரால கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக பஸ் லலித் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுச் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று துபாய் சென்றிருந்தது.

துபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் "பஸ் லலித்" என்ற லலித் கன்னங்கரவை 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவர் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் குறித்து மேலதிக விசாரணைகள் விசாரிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget