ரயில்வே திணைக்களத்தின் சில அதிகாரிகளும், ஊழியர்களும் கடமை நேரங்களின்போதும், பணி சார்ந்த சந்தர்ப்பங்களின்போதும் உணர்திறன் மிக்க தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரும் போக்கு அவதானிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவதால் ரயில்வே சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் ஒழுக்கம் என்பன கடுமையாக பாதிக்கப்படுவதாக அச்சுற்றுநிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளிநபர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கு ரயில்வே பொது முகாமையாளர், ரயில்வே அதிகாரப்பூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகிய மூவருக்கு மட்டுமே இப்புதிய சுற்றுநிரூபத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment