இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், துர்க்கை அம்மன், முருகப்பெருமான் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் இருந்து மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு எழுந்தருளி கொடியேற்றம் காலை 10.00 மணிக்கு இனிதே நடைபெற்றது
12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 25 ஆம் திகதி ரத உற்சவமும், 26ஆம் திகதி தீர்த்த உற்சவமும் சிறப்பாக நடைபெற உள்ளது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாலய மகோற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
.jpeg)
Post a Comment