வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும். அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறும், அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.
.jpeg)
Post a Comment