Ads (728x90)

அப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மெக்ஸ் (iPhone 18 Pro & Pro Max) கைபேசிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

முதன்மைக் கெமரா, செயல்திறன், மின்கல ஆயுள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகளில் பல முக்கிய மாற்றங்களுடன் இந்த புதிய ஐபோன்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒளியமைப்பு மற்றும் ஆழத்துக்கு ஏற்ப இதிலுள்ள கெமரா தானாகவே துளை அளவை மாற்றிக்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது.

இதில் புதிய ப்ரோ மாதிரிகளில் 2 நனோமீற்றர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எப்பளின் 'ஏ20 ப்ரோ' (A20 Pro) சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் 7 கோர் ஜிபியு (GPU) ஆனது முந்தைய ஏ19 ப்ரோ சிப்பை விட 40 சதவீதம் வரை வேகமான செயல்திறனை வழங்கும் எனவும் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget