Ads (728x90)

இலங்கையில் “250 இளநீர் கிராமங்களை” ("Ceylon King Coconut Village") உருவாக்கும் நோக்கில் மூன்று ஆண்டுகளுக்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை பெருந்தோட்டத் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 2026 இல் 75 கிராமங்களும், 2027 இல் 80 கிராமங்களும், 2028 இல் 95 கிராமங்களும் உருவாக்கப்படவுள்ளன.

இளநீர் உற்பத்தி மற்றும் உற்பத்திறனை அதிகரிப்பதுடன், சர்வதேச சந்தையில் இலங்கை இளநீர் மற்றும் அதுசார்ந்த பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை விரிவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

உலகளாவிய ரீதியில் இளநீர் மற்றும் அதுசார்ந்த நீர் தயாரிப்புகளின் சந்தை தற்போது 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் தசாப்தத்தில் இது கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget