Ads (728x90)

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒரு மணித்தியாலம் கூட நிறைவடைவதற்குள் அவசர அவசரமாக முடிவுக்கு வந்துள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட களத்தில், எதிர்க்கட்சியின் பிரதான பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சொற்ப எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், தோல்வியில் முடிந்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget