Ads (728x90)

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம் உத்தரவிட்டுள்ளார்.

எயார்பஸ் விமான கொள்வனவு சம்பவத்தில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நேற்று முற்பகலில் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.

அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget