Ads (728x90)

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு சட்டவிரோத வெளிநாட்டுப் பயண ஆவணத்தைத் தயாரிப்பதில் உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள வளாகத்தில் வைத்து இவரைக் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget