Ads (728x90)

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக 'நீல அறிவித்தல்' (Blue Notice) ஒன்றை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சர்வதேச பொலிஸாரிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு உட்பட 3 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கண்டறிவதற்காக 'இன்டர்போல் நீல அறிவிப்பு' (Interpol Blue Notice) ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மாத்தறை, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபை தேர்தல் காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 7.8 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 12,000 ரிசேட்டுகளை விநியோகித்தமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலான நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget