Ads (728x90)

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தம்புள்ளை இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 5 மெகாவொட் திறன் கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் நிலையத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இப்பன்கடுவ வாவியில் 10.5 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சூரிய மின் நிலையத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 7,500 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் கார்பன் டைஒக்சைட் (CO₂) அளவை சுமார் 6,440 மெட்ரிக் தொன்களால் குறைத்துக் கொள்ள முடிவதுடன், ஆண்டுதோறும் டீசல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்படும் 2.5 மில்லியன் லீற்றர் எரிபொருளும் மிச்சப்படுத்தப்படவுள்ளது. 

டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் பெருமளவிலான பணத்தை சேமிக்கவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget