கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டத்திற்கு கத்தோலிக்க மதத்தலைவர்கள் இதன்போது தமது ஆசிகளை தெரிவித்தனர்.
மேலும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், கத்தோலிக்க சமூகத்தினர் வசித்து வருகின்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது உட்பட அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.அனைத்து சமூகங்களுக்கிடையேயும் நம்பிக்கையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை கத்தோலிக்க மதத் தலைவர்கள் பாராட்டியதுடன், இந்த முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
அருட்தந்தை சிறில் காமினி, அருட்தந்தை ஜூலியன் பெற்றிக் மற்றும் அருட்தந்தைமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.


Post a Comment