Ads (728x90)

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் இன்று நண்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இவ்வாறு இலங்கைக்கு வருகை தருவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவர் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட பலரைச் சந்திக்கவுள்ளார். 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget