ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டம் (UNEP) மற்றும் குளிர்விப்பு கூட்டமைப்பு (Cool Coalition) இணைந்து செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்திய 'உலகளாவிய குளிர்விப்பு உறுதிமொழி பேரவை 2026' (Global Cooling Pledge Assembly 2026) நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தூதுக்குழுவினால் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி, 'பாசிவ் கூலிங்' முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களின் உட்புற வெப்பநிலையை குளிரூட்டிகளின் அதிகளவிலான பயன்பாடின்றி சுமார் 23°C முதல் 25°C வரை பராமரிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
உள்ளூர் சூழலுக்கு ஏற்ற நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் இந்த மாற்று முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை தூதுக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும், உயர்ந்து வரும் உலகளாவிய வெப்பநிலையை எதிர்கொள்ளவும் 'தேசிய குளிர்விப்பு கொள்கை' (National Cooling Policy) ஒன்றை உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும் இலங்கை அங்கு சுட்டிக்காட்டியது.
சுற்றாடல் பிரதி அமைச்சர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) தலைவர்களுடன் முக்கிய இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் காத்திரமான நடவடிக்கைகள் இங்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட அதிகாரிகளின் பாராட்டிற்கு உள்ளாகின.
அதாவது, வெப்பம் கட்டடத்துக்குள் நுழைவதைத் தடுப்பது மற்றும் கட்டடத்துக்குள் இருக்கும் வெப்பத்தை இயற்கை காற்றுச் சுழற்சி மூலம் வெளியேற்றுவது இதன் முதன்மை நோக்கமாகும்.


Post a Comment