Ads (728x90)

அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய இரு குற்றவாளிகள், இன்று வியாழக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குகளின் காணொளிகளைத் தமது கைத்தொலைபேசிகளில் சேமித்து வைத்திருந்த குற்றத்திற்காக அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர்கள் இருவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அசோகபுர, துன்கன்னாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய திஸாநாயக்க முதியன்சேலாகே பந்துல திஸாநாயக்க போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவராவார். 

கொழும்பு, பொரளை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சியம்பலாடூவ பத்திரணலாகே ஹர்ஷ குமார 'பரேவி சுதா'வின் நெருங்கிய சகா என்பதுடன், பூஸ்ஸ சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்துடனும் தொடர்புடையவராவார்.

அவர்களிடம் மேலதிக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget