இதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரச துறையை வலுப்படுத்த 23 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட புதிதாக 121,000 பேருக்கு அரச வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்திற்கு அடிப்படையான கல்வியிலும் மற்ற முக்கியத் துறைகளிலும் அதிக முதலீடுகளைச் செய்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே இந்த நடவடிக்கை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.சட்டபூர்வமாக விசாரணை செய்து, நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கை விசாரித்து தண்டனை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாங்கள் அதற்கான சூழலை முழுமையாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அடுத்த கட்ட செயற்பாடுகள் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்தின் முன்னிலையிலும் தான் உள்ளன. சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுறது.
எனவே நாங்கள் ஏனையவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். யார் அழுதாலும், எப்படி அழுதாலும் அதனை நாம் கண்டுகொள்வதில்லை. மகன் உள்ளே சென்றதற்காக தந்தை அழுவது எங்களுக்குத் தெரிவதில்லை. மாமியார் சுகவீனமுற்று இருக்கின்றார் என்று மருமகள் அழுவது எங்களுக்குத் தெரிவதில்லை. அநுராதபுரத்தில் இருக்கும் மனைவி உள்ளேயும், கணவன் வெளியேயும் அழுதால் எங்களுக்குத் தெரிவதில்லை.ஏனெனில், அந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். யார்? எவர்? என்ன? என்பது எங்களுக்கு முக்கியமல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டே தீரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment