வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் காரணமாகக் காணப்படும் பிரச்சினைகள், அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தடைகள் மற்றும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், சுற்றுச்சூழல் அமைச்சர், பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதற்காக 2025ஆம் ஆண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவுக்கு ஆறு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டபோதும், ஓராண்டு கடந்தும் இறுதி அறிக்கை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சில அதிகாரிகளிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் செயன்முறையை முழுமைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், ஆய்வுகள் நிறைவடைந்து விடுவிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட காணிகளைக்கூட இதுவரை விடுவிக்க முடியாத நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகளை விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து, அதன் ஒப்புதலுடன் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
.jpeg)
Post a Comment