Ads (728x90)

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் வெறுப்புப் பேச்சுக்களைப் பதிவேற்றும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பான பதிவுகள் குறித்து சைபர் குற்றப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சில பகுதிகளில் கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்தவாறு போலியான முகநூல் கணக்குகளைத் தயாரித்து, அதன் ஊடாக வெறுப்புப் பேச்சுக்களைப் பரப்பும் செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறான இன நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராகச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கடந்த காலங்களில் இனவாதத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்ட தரப்பினர், இன்றும் அதே பழைய பழக்கத்துடன்தான் செயற்படுகின்றனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் எத்தகைய முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை. இனிவரும் காலங்களிலும் அவ்வாறான விரும்பத்தகாத நிலை எற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget