Ads (728x90)

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியுமான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாளி தமிழரான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நவநீதம் பிள்ளைக்கு, சர்வதேச சட்டத்துறைக்கான பங்களிப்பைப் பாராட்டி 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சட்டத்தையும். அமைதியையும் மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நோபல் குழுவின் தலைவர் யோர்கன் வோட்னே ப்ரைட்னெஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்தின் வரம்பையும், அதன் தாக்கத்தையும் குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்துவதற்கு நவநீதம் பிள்ளை பங்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வெற்றியாளரை அறிவித்தபோது, நவநீதம் பிள்ளை தனித்துவமான துணிச்சலுடன் மேலும் விரிவான உலகளாவிய சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான பாதையைத் திறந்துள்ளதாகவும் நோபல் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.



 

Post a Comment

Recent News

Recent Posts Widget