பௌத்த தேரர்களின் தலைமையில் நடைபெற்ற நான்காவதும், பாரியதுமான இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் சிறப்பான நல்லாட்சியை நிலைநிறுத்தும் வகையிலும், தற்போதைய இந்த அரசாங்கத்தின் தைரியமான, நேர்மையான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை எவ்வித தயக்கமுமின்றித் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று இந்தப் பேரணியில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைச் சீர்குலைக்கக முற்படும் புத்த பிக்குகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஊழல்வாதிகளுக்கு எதிராகத் தங்களது சக்தியைக் காட்டும் வகையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment