ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் அகற்றியுள்ளனர்.
அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என நிபந்தனை விதித்து நீதிமன்றத்தில் பொலிஸார் விடுத்த கோரிக்கையை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Post a Comment