கொத்மலையில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, இந்த மின் தடைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பகுதியில் மின்சாரம் ஏற்கனவே மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகளிற்கும் படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய மின் கட்டமைப்பை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில், வீட்டின் கூரைகளில் சூரிய சக்தி மின் தகடுகளை (Solar Panels) அமைத்துள்ளவர்கள், அவற்றை அணைத்து வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின் தடைக்கான காரணங்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் அதே வேளையில், நாடு முழுவதும் மின்சாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment