கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 14.41 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 6.03 வீத வளர்ச்சியாகும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இக்காலப்பகுதியில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 5.72 வீதத்தால் அதிகரித்து 12.01 பில்லியன் டொலராகவும், சேவைகள் ஏற்றுமதி வருமானம் 7.20 வீதத்தால் அதிகரித்து 3.27 பில்லியன் டொலராகவும் பதிவாகியுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1.62 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.57 வீத வளர்ச்சியாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment