Ads (728x90)

நவம்பர் மாதத்துக்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்காக 12,142,055,250 ரூபா (12.14 பில்லியன் ரூபா) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையால், நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் அவசர நிவாரணக் கொடுப்பனவொன்றை வழங்க கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைய, மிகவும் வறிய பிரிவினருக்கு வழங்கப்படும் மாதாந்த அஸ்வெசும கொடுப்பனவான 17,500 ரூபாவுடன் மேலதிகமாக 3,000 ரூபாவும், வறிய பிரிவினருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 10,000 ரூபாவுடன் மேலதிகமாக 2,000 ரூபாவும் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, மிகவும் வறிய பிரிவைச் சேர்ந்த 381,369 குடும்பங்களும், வறிய பிரிவைச் சேர்ந்த 635,761 குடும்பங்களும் உள்ளடங்கலாக மொத்தம் 1,017,130 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு இன்று கிடைக்கப்பெறவுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget