Ads (728x90)

நடப்பாண்டின் இறுதி காலாண்டில் (ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை) மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கவேண்டிய அவசியமில்லை என தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டகம் அறிவித்துள்ளது. 

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை மற்றும் சாதகமான மழைவீழ்ச்சி முன்னறிவிப்பு காரணமாக முன்னர் விடுத்த கட்டண அதிகரிப்பு கோரிக்கையை தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டகம் உத்தியோகபூர்வமாக மீளப் பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் சுமார் 4.4 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை நிலவுவதாகக் சுட்டிக்காட்டி, இறுதி மூன்று மாதங்களுக்கு 2.88 சதவீத மின்சாரக் கட்டண உயர்வை வழங்குமாறு இந்நிறுவனம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

எனினும், நிலவும் சூழ்நிலைகளை பரிசீலித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 1.46 சதவீத கட்டணத் திருத்தத்துக்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தம் குறித்த பகிரங்க பங்குதாரர் கலந்தாலோசனை நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளபோதே, இந்நிறுவனம் தனது முந்தைய நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளதுடன், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget