Ads (728x90)

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, பாடங்களுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளை குறித்த காலப்பகுதியில் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,519 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget