Ads (728x90)

இலங்கையின் பல பகுதிகளில் PM2.5 மற்றும் PM10 நுண்துகள்களின் (particulate matter) அளவு அதிகரித்து, காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு வெளியே இருந்து வீசும் காற்று மற்றும் வங்காள விரிகுடாவில் நிலவும் வானிலை மாற்றங்கள் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து மாசுத் துகள்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதே இந்த நிலைக்குக் காரணம் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், மற்றும் அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு, கண்டி மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளை அண்டிய பிரதேசங்களிலும் வளிமண்டலத்தில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் காற்றுத் தரச் சுட்டெண்ணுக்கு அமைய இது சற்று ஆரோக்கியமற்ற நிலையாகும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, உணர்திறன் கொண்ட நபர்களுக்கு (சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள்) சுகாதார ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை, எதிர்வரும் சில நாட்களுக்கும் இந்த நிலைமையை எதிர்பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்பற்றப்பட வேண்டியதாக சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகள் aq.cea.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget