Ads (728x90)

தேவேந்திரமுனைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களை கடத்திச் சென்ற படகுடன் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கடல்சார் பங்காளர்களுடன் இணைந்து, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்கு அப்பால் கடற்படையினர் முன்னெடுத்த போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இப்படகு கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட படகும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக நேற்று வெள்ளிக்கிழமை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget