இதன்படி, குறித்த கடன் தரப்படுத்தல்களின் எதிர்கால நோக்கு நிலையானதாக பேணப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இலங்கையின் குறுகியகால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயக் கடன் தரப்படுத்தல்களும் 'C' இலிருந்து 'B' ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
இலங்கையின் அரச வருமானம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை மற்றும் சவாலான சர்வதேச பொருளாதாரச் சூழலுக்கு மத்தியிலும் வெளிநாட்டு கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை ஆகியவை இந்தத் தீர்மானத்திற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பொருளாதாரத்தின் மீள்திறன் காரணமாக அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் வெளிநாட்டு கையிருப்பு மேலும் வலுப்பெறுவதுடன், கடன் மீள்செலுத்தல் தொடர்பான அரசாங்கத்தின் அபாயங்களும் கணிசமாகக் குறையும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment