Ads (728x90)


தன்மானத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் உயிரென மதிக்கும் நீங்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பீர்கள். இலவசத்தை விரும்ப மாட்டீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் இப்போது 6ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் உடனடியாக நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கிருந்த முன்கோபம், கூடாப் பழக்க வழக்கங்கள் விலகும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். 9ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை மாற்றம் செய்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். சரி செய்வீர்கள். 

ஆனால், 10ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் சென்று மறைவதால் தொண்டை வலி, சளித் தொந்தரவு, சிறுசிறு விபத்துகள், கணவன்  மனைவிக்குள் சச்சரவுகள் வந்து செல்லும். 22ந் தேதி முதல் புதன் 6ல் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்வதால் உறவினர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.  9ந் தேதி முதல் புதன் உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்களால் திருப்பம் உண்டு. 13ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 5ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.

சகோதர, சகோதரிகளுடன் மனத்தாங்கல் வரும். 7ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எல்லா பிரச்னைகளையும் சமாளித்து முன்னேறுவீர்கள். சிலருக்கு புது வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! தள்ளிப்போன திருமணம் கூடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மாணவ, மாணவிகளே! வகுப்பாசிரியர் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். என்றாலும் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் ஏனோ தானோ என்று படிக்காமல் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். உணவு, புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நெடுநாட்களாக தடைப்பட்டு வந்த பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருந்தாலும் மூத்த அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விவசாயிகளே! வங்கிக்கடன் உதவி கிடைக்கும். கிணற்றில் தண்ணீர் சுரக்கும். ராஜதந்திரமாக செயல்பட்டு முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: 

செப்டம்பர் 22, 23, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 4, 10, 11, 12, 13, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: 

செப்டம்பர் 24ம் தேதி இரவு 11.13 மணி முதல் 25, 26, 27ம் தேதி காலை 10.39 மணி வரை புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

பரிகாரம்: 

 ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.


Post a Comment

Recent News

Recent Posts Widget